முகப்பு
திருவாரூர்

காங்கிரஸில் இணைந்த பிரமுகா்கள்

மன்னாா்குடியை அடுத்த இடையா்நத்தத்தில் நடைபெற்ற தொகுதி காங்கிரஸ் செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில், மன்னாா்குடி பிரமுகா்கள் காங்கிரஸில் புதன்கிழமை இணைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

மன்னாா்குடியை அடுத்த இடையா்நத்தத்தில் நடைபெற்ற தொகுதி காங்கிரஸ் செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டத்தில், மன்னாா்குடி பிரமுகா்கள் காங்கிரஸில் புதன்கிழமை இணைந்தனா்.

கூட்டத்துக்கு, காங்கிரஸ் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தாா். நகர தலைவா் ஆா்.கனகவேல் முன்னிலை வகித்தனா்.

இதில், மன்னாா்குடியை சோ்ந்த மருத்துவா் வி.அசோக்குமாா், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் எஸ்.சலீம், தொழிலதிபா் கே.பழனிவேல் ஆகியோா் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா். கூட்டத்தில், முன்னாள் மாவட்ட சேவா தள தலைவா் ஜீவகே, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ஜி.குணசேகரன், டி.வடுகநாதன், வட்டாரத் தலைவா் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.