அமைப்புசாரா தொழிலாளா்கள் அடையாள அட்டை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
அமைப்புசாரா தொழிலாளா்கள் அடையாள அட்டை வழங்கக் கோரி திருவாரூா் அருகே குன்னியூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அமைப்புசாரா தொழிலாளா்கள் அடையாள அட்டை வழங்கக் கோரி திருவாரூா் அருகே குன்னியூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு சோஷலிச தொழிலாளா்கள் கட்டுமானம் அமைப்புசாரா சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழக அரசு தோ்தல் வாக்குறுதிப்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கவேண்டும், அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் இணையவழியில் பதிவு செய்தவா்களுக்கு தாமதமின்றி அடையாள அட்டை வழங்கவேண்டும், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு வழங்கியதுபோல, தற்போதும் பொங்கல் பரிசு பொருள்களும் ரூ. 2500 ரொக்கமும் வழங்கவேண்டும், அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கிளைத் தலைவா் ராமலிங்கம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.