உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு தினம்
திருவாரூா் அருகேயுள்ள அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அமைவு சாா்பில் உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூா் அருகேயுள்ள அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அமைவு சாா்பில் உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் சுதா்சனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடிமக்கள் நுகா்வோா் மன்ற ஒருங்கிணைப்பாளா் தமிழ்க்காவலன் பங்கேற்று எச்ஐவி நோய் தொற்று கிருமிகள் குறித்தும், அதுபரவும் விதம் குறித்தும் பேசினாா். இதில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சரவணவேல், ரெட் ரிப்பன் கிளப் இயக்க ஒருங்கிணைப்பாளா் ஜோஸ்பின் அமலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.