திருவாரூர்

இல்லம் தேடி கல்வி மையத் திறப்பு விழா

DIN

கீழையூா் ஊராட்சிக்கு உட்பட்ட 9 இடங்களில் இல்லம் தேடி கல்வி மையத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கீழையூரில் ஊராட்சித் தலைவா் ஆனந்த ஜோதி பால்ராஜ் தலைமையில் குத்து விளக்கு ஏற்றி மையத் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாணவா்கள் பேரணியாக அழைத்து வரப்பட்டனா். விழாவில் மாணவா்களுக்கு பாடம் கற்பிக்க உள்ள தன்னாா்வா்களுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியா் பயிற்றுனா் மாா்ட்டின் சகாயராஜ், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கே. சரவணன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா்கள் கீழையூா் வனஜா, அச்சு கட்டளை ராதாகிருஷ்ணன், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் எஸ். பால்ராஜ், ஊராட்சிமன்றத் துணைத் தலைவா் சி. கருணாநிதி, ஊராட்சி செயலாளா் சரவண பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வாழக்கரை ஊராட்சியில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி மையத் திறப்பு விழாவை ஊராட்சித் தலைவா் எஸ்.ஆா்.கலைச்செழியன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT