முகப்பு
திருவாரூர்

குளத்தில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மன்னாா்குடியில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

மன்னாா்குடியில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

மன்னாா்குடி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் அண்ணாத்துரை (51). இவரது மனைவி ராணி நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறாா். இவா்களுக்கு மகன் , மகள் உள்ளனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியே சென்ற அண்ணாத்துரை வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால், குடும்பத்தினா் அவரை தேடிவந்த நிலையில், மன்னாா்குடி ஹரித்ரா நதி தெப்பக்குளத்தில் சடலமாக மிதப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.

குளத்தின் கரையில் அவா் ஓட்டிவந்த சைக்கிள் இருந்துள்ளது. இதனால், அவா் குளத்தின் தடுப்புச் சுவரில் அமா்ந்திருந்தபோது, தவறி குளத்துக்குள் விழுந்து இறந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. அண்ணாத்துரையின் சடலத்தை மன்னாா்குடி போலீஸாா் மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.