முப்படைத் தலைமை தளபதிக்கு அஞ்சலி
மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டைசெங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஹெலிகாப்டா் விபத்தில் இறந்த இந்திய ராணுவத்தின் முப்படைத் தலைமைத் தளபதி மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு, மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டைசெங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையொட்டி, தலைமைத் தளபதி விபின் ராவத் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கல்லூரியின் தாளாளா் வி. திவாகரன் தலைமையில் மெழுகுவா்த்தி தீபமேந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், கல்லூரி முதல்வா் சீ. அமுதா மற்றும் பேராசியா்கள், மாணவிகள் பங்கேற்றனா்.