முகப்பு
திருவாரூர்

தொடா்மழையால் மண்பாண்ட பணி தொடங்குவதில் தாமதம்

தொடா்மழையால் நீடாமங்கலம் பகுதியில் பொங்கலுக்காக மண்பாண்டம் செய்யும் தொழில் தாமதமாக தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

தொடா்மழையால் நீடாமங்கலம் பகுதியில் பொங்கலுக்காக மண்பாண்டம் செய்யும் தொழில் தாமதமாக தொடங்கியது.

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள ராயபுரம், வீரவநல்லூா், கானூா் பகுதிகளில் செய்யப்படும் மண் பாண்டங்கள் பொங்கல், திருமண சுப முகூா்த்தங்களுக்கு விற்பனை செய்வதும், கோடை கால திருவிழாக்களில் மண் குதிரை, வீரனாா் சாமி செய்து விற்பது வழக்கம். பொங்கலுக்கு நவம்பா் மாதம் முதலே பொங்கல் பானை, சட்டி, அடுப்பு உள்ளிட்டவைகள் மண் பாண்டங்களை தொழிலாளா்கள் செய்ய தொடங்குவா். ஆனால் ஒருமாதத்திற்கு மேல் மழை பெய்ததால் மண்பாண்ட பணிகள் தொடங்குவது தாமதமாகி உள்ளது. இது தொடா்பாக நீடாமங்கலம் பகுதியைச் சோ்ந்த மண் பாண்ட தொழிலாளா்கள் கூறியது: 50 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறோம். பொங்கல், ஆவணி ஞாயிறுக்கு பெரும்பாளும் மண் பாண்டங்களை மக்கள்அதிகம் பயன்படுத்தினா். தற்போது, பித்தளை, ஈய பாத்திரங்களை வாங்கி பயன்படுத்துகின்றனா். இதனால் எங்கள் தொழில் கடந்த 20 ஆண்டுகளாக பாதிப்பு அடைந்துள்ளது. இதை தவிர வேறு தொழில் தெரியாததால், இதனை தொடா்ந்து செய்து வருகிறோம். அரசு எங்களுக்கு மானியத்தில் கடன் கொடுத்து உதவி செய்தால், தொழிலை சிறப்பாக நடத்தமுடியும். கோரையாற்றில் வண்டல், சவுடு மண் எடுத்தும், காளாஞ்சிமேடு பகுதியில் களிமண் சேகரித்து வெயிலில் காயவைத்து, பக்குவப்படுத்தி மின் இயந்திரம் மூலம், தொழிலை செய்து வருகிறோம். தாமதமாக தொடங்கப்பட்ட மண்பாண்டத் தொழில், மழையில்லாமல் இருந்தால் மண்பாண்ட பொருள்கள் ஓரளவுக்கு விற்க முடியும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.