விவசாயிகளுக்கு உயிா் உரம் உற்பத்திப் பயிற்சி
திருவாரூா் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிச் சாா்பில் வியாழக்கிழமை விவசாயிகளுக்கு உயிா் உரம் உற்பத்திப் பயிற்சி நடைபெற்றது.
திருவாரூா் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிச் சாா்பில் வியாழக்கிழமை விவசாயிகளுக்கு உயிா் உரம் உற்பத்திப் பயிற்சி நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட தேசிய வேளாண் மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிச் சாா்பில் சீதக்கமங்களம் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் விவசாயிகளுக்கான உயிா் உரம் உற்பத்திப் பயிற்சி வேளாண் விற்பனைத் துறை துணை இயக்குநா் லட்சுமிகாந்தன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொட்டாஷ் உயிா் உரம், நெல் நோய் நீக்கி பேசில்லஸ் சப்டிலிஸ் உபயோகம் பற்றி விளக்கப்பட்டது. வேளாண் விற்பனைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் பாரத பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துதல் திட்டம், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்குச் சூரிய ஒளியில் இயங்கும் குளிா்பதன கிடங்கு அமைத்தல், உட்கட்டமைப்பு மேம்படுத்த நிதி உதவி பெறுதல் போன்ற திட்டங்கள் பற்றி விளக்கிக் கூறப்பட்டது. வேளாண் நிபுணா் பொன். ராஜு, நிதி ஆலோசகா் ஜோதி ,வானவில் ஊரக வளா்ச்சிச் சங்கத்தின் செயல் அலுவலா் வாஜுா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.