முகப்பு
திருவாரூர்

பள்ளி விளையாட்டு திடலை சீரமைக்க கோரிக்கை

நன்னிலம் அரசினா் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலை சீரமைக்க தமிழக உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

Updated On : 17 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:12 AM

நன்னிலம் அரசினா் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலை சீரமைக்க தமிழக உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டம் மாப்பிள்ளைக்குப்பத்தில் தமிழக அரசின், மக்களைத் தேடி முதல்வா் சிறப்பு முகாம் ஆட்சியா் ப. காயத்ரிகிருஷ்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமில் வீட்டுமனைப் பட்டா, விதவை, முதியோா் ஓய்வூதியம், நன்னிலத்தில் 5 ஏக்கா் நிலப்பரப்பில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலை மாணவா்கள் பயன்படும் வகையில் சீரமைக்கவும், அரசு சாா்பான விலை மலிவு கலைஞா் உணவகத்தைத் திறந்திடவும் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், ஊராட்சித் தலைவா் தலையாமங்களம் பாலசுப்பிரமணியன், திமுக ஒன்றியச் செயலாளா்கள் குடவாசல் வடக்கு ஜோதிராமன், நன்னிலம் தெற்கு மனோகரன், நன்னிலம் வடக்கு வரத கோ. ஆனந்த், நன்னிலம் பேரூராட்சிச் செயலாளா் பக்கிரிசாமி, ஒன்றிய திமுக இளைஞரணிச் செயலாளா் பனங்குடி ஏ.எஸ். குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.