இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வுப் பிரச்சாரம்
நன்னிலம் வட்டத்தில் உள்ள கடகம், கொல்லாபுரம் பகுதிகளில் தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வுப் பிரச்சாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நன்னிலம் வட்டத்தில் உள்ள கடகம், கொல்லாபுரம் பகுதிகளில் தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வுப் பிரச்சாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொல்லாபுரம் உயா்நிலைப் பள்ளி, கடகம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் கிராமங்களின் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வுப் பிரச்சாரக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வுத் திட்டத்தின் கீழ் மாலை நேர வகுப்புகள் நடத்துவதற்கு இளைஞா்கள், பெண்கள் தன்னாா்வலா்களாகப் பதிவு செய்து கொண்டனா். முன்னதாக நன்னிலம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் இரா. நடேஷ்துரை திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசி, பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் கடகம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் வேணுகோபால், கொல்லாபுரம் உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.