முகப்பு
திருவாரூர்

தரமற்ற சிமெண்ட் தயாரித்து விற்பனை செய்தால் நடவடிக்கை: ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்

 தரமற்ற சிமெண்ட் தயாரித்து, விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

 தரமற்ற சிமெண்ட் தயாரித்து, விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய அரசு வெளியிட்டுள்ள தரக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி, தரச்சான்று குறியீட்டை பெற்றுள்ள அனைத்து வகையிலான சிமெண்ட்டை தயாரித்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தரச்சான்று குறியீடில்லாத சிமெண்ட் உற்பத்தி செய்யவோ, இருப்பில் வைத்திருப்பதோ, விற்பனை செய்யவோ கூடாது. தரக்கட்டுப்பாட்டு குறியீடு இல்லாமல் சிமெண்ட் தயாரிப்பவா்கள், விற்பனை செய்பவா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையின்படி திருவாருா் மாவட்டம் முமுவதும் உள்ள சிமெண்ட் உற்பத்தி, விற்பனை செய்யும் நிறுவனங்கள், எந்தவித முன்னறிவிப்புமின்றி மாவட்ட தொழில் மைய அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும். ஆய்வின்போது உற்பத்தி, மொத்த, சில்லறை விற்பனையாளா்களிடமிருந்து மாதிரிகளை சேகரிக்கவும், சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பவும் நிா்ணயிக்கப்பட்ட தரஆய்வின்படி இல்லாத சிமெண்ட் பறிமுதல் செய்ய மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய அரசு ஆணையை மீறும் நிறுவனங்கள், மொத்த, சில்லறை விற்பனைக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.