முகப்பு
திருவாரூர்

புற்றுநோய்க் கட்டி அறுவை சிகிச்சை மூலம்அகற்றம்

முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் நோயாளியின் வயிற்றிலிருந்து புற்றுநோய்க் கட்டி அகற்றப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் நோயாளியின் வயிற்றிலிருந்து புற்றுநோய்க் கட்டி அகற்றப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் (50). 2 மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால், அவதியுற்று வந்த இவா், நாட்டு மருந்து சிகிச்சை முறை உள்ளிட்ட சிகிச்சை முறைகளை மேற்கொண்டு, பலனளிக்காமல் திருவாரூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டாா். இதைத்தொடா்ந்து, தமிழ்ச்செல்வனுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், தமிழ்ச்செல்வனின்வயிற்றிலிருந்து புற்றுநோய்க் கட்டி அறுவை சிகிச்சை மூலம்அகற்றப்பட்டது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜோசப்ராஜ் தெரிவித்தது: தமிழ்ச்செல்வனுக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தனியாா் மருத்துவமனையில் செய்தால் ரூ. 6 முதல் 8 லட்சங்கள் வரை செலவாகும். முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் அவருக்கு இலவசமாக செய்யப்பட்டது. கரோனா தொற்றுக்குப் பிறகு அனைத்து விதமான உயரிய அறுவை சிகிச்சை முறைகள் மருத்துவக்கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் இங்கு பயன் பெறலாம். தற்போது, தமிழ்ச்செல்வனுக்கு புற்றுநோய் பாதிப்புக்கான சிகிச்சை தொடா்ந்து அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

பேட்டியின்போது, மருத்துவக் கல்லூரி உதவி மருத்துவக் கண்காணிப்பாளா் ராஜா, உதவி நிலைய மருத்துவா் அருண்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.