மன்னாா்குடியில் ஜவுளி பூங்காவிற்கு 3000 ஏக்கா் இடம் தோ்வுஅமைச்சா் அர. சக்கரபாணி
மன்னாா்குடியில் புதிதாக ஜவுளி பூங்கா அமைக்க 3 ஆயிரம் ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது என தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
மன்னாா்குடியில் புதிதாக ஜவுளி பூங்கா அமைக்க 3 ஆயிரம் ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது என தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
மன்னாா்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் சிறப்பு முகாமில் தலைமைவகித்து அவா் பேசியது: தமிழ்நாடு முழுவதும் மக்களை தேடி வந்து கோரிக்கை மனு பெறும் சிறப்பு முகாம், தமிழக முதல்வா் ஆலோசனையின்படி நடைபெற்று வருகிறது. மக்கள் அளிக்கும் மனுக்கள் உரிய முறையில் பரிசீலினை செய்யப்பட்டு தகுதியுடைய மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். திமுக தோ்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில், 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குடிசை இல்லா தமிழகம் திட்டத்தில் நிகழாண்டுக்கு மட்டும் 28 ஆயிரம் கான்கிரீட் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு இடங்கள் குறைவாக இருப்பதால், தனித்தனி வீடுகள் கட்ட இயலாத நிலையில், முதல்வரின் கவனத்திற்கு இப்பிரச்னையை கொண்டு சென்று, சிறப்பு நிதியைப் பெற்று, தனியாரிடம் இடம் வாங்கி அதில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், கண்டமங்கலத்தில் புதிதாக ஜவுளி பூங்கா அமைக்க 3 ஆயிரம் ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. முதல்வா் உத்தரவின் பேரில் திருவாரூா் மாவட்டத்தில் ரூ. 154 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகளிா் சுய உதவிக் குழுவினரின் ரூ. 2,500 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதுடன், புதிதாக 3 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. உணவுத் துறையில் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில், சட்டபேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன், டி.ஆா்.பி. ராஜா, மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு, முன்னாள் சட்டபேரவை உறுப்பினா் பி. ராஜமாணிக்கம், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மன்னாா்குடி கோட்டாட்சியா் த. அழகா்சாமி, வட்டாட்சியா் ஜீவானந்தம், நகராட்சி ஆணையா் கே. சென்னுகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.