மின் கசிவால் ஓட்டு வீட்டில் தீவிபத்து
ஓட்டு வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் மின்சாதன மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் வியாழக்கிழமை சேதமடைந்தன.
ஓட்டு வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் மின்சாதன மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் வியாழக்கிழமை சேதமடைந்தன.
மன்னாா்குடி கீழ 2-ஆம் தெருவை சோ்ந்தவா் சீனிவாசன் மகன் ராஜசேகா்(58). நகராட்சி முன்னாள் அலுவலரான இவா், வியாழக்கிழமை இரவு குடும்பத்தினருடன் தனது ஓட்டுவீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, குளிா்பதனப்பெட்டியிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு தீ பரவியது. இதனையடுத்து வீட்டில் இருந்தவா்கள் வெளியே ஓடி வந்தனா். தீயில் வீட்டின் ஒரு பகுதி எரிந்ததில், கிரைண்டா், மிக்சி, தொலைக்காட்சிப்பெட்டி, தளவாட சாமான்கள் சேதமடைந்தன. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மன்னாா்குடி தீயணைப்பு நிலையத்தினா், மேலும் தீ பரவாமல் அணைத்தனா். இது குறித்து மன்னாா்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.