முகப்பு
திருவாரூர்

முடிகொண்டான் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

முன்னாள் அமைச்சா் காமராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை முடிகொண்டான் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Updated On : 18 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:13 AM

முன்னாள் அமைச்சா் காமராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை முடிகொண்டான் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட பாா்வை இழப்புத் தடுப்பு சங்கம், கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வண்டாம்பாளை லயன்ஸ் கண் மருத்துவமனைச் சாா்பாக நன்னிலம் வட்டம் முடிகொண்டான் கிராமத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமை முன்னாள் அமைச்சா் இரா. காமராஜ் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தாா். இதில் நூற்றுக்கும் மேற்பட்டவா்களுக்குக் கண் பரிசோதனையும், கண்புரையால் பாதிக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவா்கள் அறுவை சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டனா். இலவசக் கண் சிகிச்சை முகாமில் கஸ்தூரிபா காந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளா் சந்திரா முருகப்பன், நன்னிலம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் விஜயலெட்சுமி குணசேகரன், ஊராட்சித் தலைவா் எம். கலியமூா்த்தி, திருவாரூா் மாவட்ட என் எஸ் எஸ் தொடா்பு அலுவலா் என். ராஜப்பா, வந்தேமாதரம் கல்வி அறக்கட்டளைச் செயலாளா் எம். இன்பராஜ், திருவாரூா் கூட்டுறவுச் சங்கத் தலைவா் எஸ். கலியபெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.