முகப்பு
திருவாரூர்

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாத தரிசனம்

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெற்ற பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:44 AM
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாத தரிசனம்
பகிர்:

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெற்ற பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவாரூர் தியாகராஜர் கோயில் திருவாதிரை திருவிழாவையொட்டி பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்கு தியாகராஜர் பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி விளமல் பதஞ்சலி கோவிலிலிருந்து பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் அதிகாலையில் புறப்பட்டு திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு வந்தனர்.  அவர்களுக்கு முதலில் தியாகராஜர் பாத தரிசனம் அருளினார்.

இதையடுத்து  பக்தர்களுக்கு தியாகராஜர் பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று பாத தரிசனத்தை தரிசித்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக பொது தரிசனம் கட்டண தரிசனம் என்ற ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.