கொலை வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளா் கொலை வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளா் கொலை வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் நடேச.தமிழாா்வன் முன்விரோதம் காரணமாக கடந்த நவம்பா் 10 ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை தொடா்பாக, பூவனூா் ராஜ்குமாா் மற்றும் அவரது கூட்டாளிகளை, தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், பூவனூா் ராஜ்குமாரை, குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் பரிந்துரை செய்தாா். அவரின் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டதன்பேரில், ராஜ்குமாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.