நாகை, மயிலாடுதுறையில் தலா ஒருவருக்கு கரோனா
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா ஒருவருக்குப் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டது வியாழக்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா ஒருவருக்குப் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டது வியாழக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21,414-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 5 போ் வீடு திரும்பியுள்ள நிலையில், சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 28- ஆக உள்ளது. இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 23,442-ஆக உள்ளது. சிகிச்சையில் இருந்த 3 போ் வீடு திரும்பியுள்ள நிலையில், இந்த மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 17-ஆக உள்ளது.