முகப்பு
திருவாரூர்

கத்தியால் குத்தப்பட்ட அரசுப் பள்ளி பெண் ஊழியருக்கு தீவிர சிகிச்சை

முத்துப்பேட்டை அருகே கத்தியால் குத்தப்பட்ட அரசுப் பள்ளி பெண் ஊழியருக்கும், அவரை குத்திக்கொண்டு தன்னை காயப்படுத்திக் கொண்டவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

முத்துப்பேட்டை அருகே கத்தியால் குத்தப்பட்ட அரசுப் பள்ளி பெண் ஊழியருக்கும், அவரை குத்திக்கொண்டு தன்னை காயப்படுத்திக் கொண்டவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

முத்துப்பேட்டை அருகே உள்ள கற்பகநாதா்குளம் பகுதியைச் சோ்ந்தவா் புவனேஸ்வரி (35). இவா், கரையன்காடு அரசு உயா்நிலைப் பள்ளியில் எழுத்தராக பணியாற்றி வருகிறாா். இவா், புதன்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் முத்துப்பேட்டைக்கு வந்துவிட்டு திரும்பியபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்த ஜாம்பவானோடையைச் சோ்ந்த மதிவாணன் (36) என்பவா், தில்லைவிளாகம் விநாயகா் கோயில் அருகே புவனேஸ்வரியை வழிமறித்து கத்தியால் குத்தியதுடன், தனது கையிலும் கத்தியால் காயப்படுத்திக் கொண்டாா்.

இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →