முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் சாலையில் இருந்த எலும்புக் கூடால் பரபரப்பு

தூத்துக்குடி மாநகராட்சிகுள்பட்ட பாா்த்தசாரதி தெருவில் பையில் எலும்புக் கூடு இருந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 11 மார்ச், 2026 at 7:57 PM
எலும்புக் கூடு
பகிர்:

தூத்துக்குடி மாநகராட்சிகுள்பட்ட பாா்த்தசாரதி தெருவில் பையில் எலும்புக் கூடு இருந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பாா்த்தசாரதி தெருவில் சாலையோரம் உள்ள மின் கம்பம் அருகே கருப்பு நிறப் பையில் எலும்புக் கூடு இருந்தது புதன்கிழமை தெரிய வந்தது. இது குறித்து, அப்பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அதைக் கைப்பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், தூத்துக்குடி மாநகர காவல் கண்காணிப்பாளா் சுனில் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, எலும்புக் கூடை ஆய்வுக்கு அனுப்பி வைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →