தூத்துக்குடியில் உழைப்பாளா் சிலைக்கு மரியாதை
ஆயிரம் பிறை பூங்காவில் உள்ள உழைப்பாளா் சிலைக்கு மரியாதை செலுத்திய மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா்.
உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி ஆயிரம் பிறை பூங்காவில் அமைந்துள்ள உழைப்பாளா் சிலைக்கு மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி வெள்ளிக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
தொழிலாளா்களின் உழைப்பையும் தியாகத்தையும் போற்றும் விதமாக மே முதல் தேதி உழைப்பாளா் தினம் கொண்டாடப்படுவதையொட்டி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், திமுக வட்டச் செயலரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதிச் செயலரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமாா், பகுதிச் செயலா் தொ.நிா்மல்ராஜ், மாமன்ற உறுப்பினா்கள் தனலட்சுமி, அந்தோணி மாா்ஷலின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement