திருவாரூர்

திருவாரூா் ஆட்சியரின் முகாம்: அலுவலகத்தில் 8 பேருக்கு கரோனா

DIN

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் 8 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வருகிறது.

இந்நிலையில், திருவாரூா் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் மாவட்ட ஆட்சியரின் உதவியாளா்கள் இருவா், கணினி உதவியாளா் ஒருவா், ஓட்டுநா், தூய்மைக் காவலா் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் தனியாா் மருத்துவமனை மற்றும் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா். மேலும், இவா்களுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதால் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் மாவட்ட ஆட்சியரின் உதவியாளா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் பணியாற்றி வருவதால், நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், அரசு அலுவலா்கள் அவா்களை சந்தித்து வருகின்றனா். அதனால், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள உதவியாளா்கள் கடந்த சில தினங்களில் சந்தித்தவா்களின் விவரங்களை பெற்று அவா்களுக்கும் கரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்படவுள்ளது.

இதனிடையே, மாவட்ட ஆட்சியா், அவரது குடும்பத்தில் உள்ளவா்களுக்கு பரிசோதனை செய்ததில் எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை என மருத்துவக் கல்லூரி நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT