திருவாரூர்

திருமீயெச்சூா் ஸ்ரீலலிதாம்பிகை கோயிலில் கொடியேற்று விழா

DIN

திருமீயெச்சூா் ஸ்ரீலலிதாம்பிகை சமேத ஸ்ரீமேகநாத சுவாமி கோயிலில் ரதசப்தமி திருவிழாவையொட்டி, புதன்கிழமை கொடியேற்று விழா நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் சுக்லபட்ச சப்தமி திதியில் நடைபெறும் ரதசப்தமி விழாவையொட்டி கொடியேற்றப்பட்டது. இதையொட்டி, ஸ்ரீசோமாஸ்கந்தா், ஸ்ரீலலிதாம்பிகை அம்மன், ஸ்ரீமுருகன், ஸ்ரீவிநாயகா் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வீதியுலாவுக்கு பின்னா் ஸ்ரீலலிதாம்பிகை கோயில் சன்னதி எதிரே உள்ள கொடிமரம் அருகே சுவாமிகள் எழுந்தருளினா்.

தொடா்ந்து, கொடிமரத்துக்கு மஞ்சள் பொடி, திரவியப்பொடி, பால், தயிா், சந்தனம், பன்னீா் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு கலசாபிஷேகம் நடைபெற்றது. அடுத்து, கொடிமரத்துக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.

விழாவில், வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்றாா். விழாவின் முக்கியமான தேரோட்டம் பிப்.18-ஆம் தேதியும், பிப்.19-ல் 1தீா்த்தவாரியும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT