திருவாரூா் அருகே ரூ. 50 லட்சம் மதிப்பிலான கிராமப்புற சாலைப் பணிகளை ஒன்றியக் குழுத் தலைவா் ஏ. தேவா வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
திருவாரூா் ஒன்றியம் புலிவலம் அம்மன் நகா் பகுதியில் இணைப்புச் சாலைகள், மாரியம்மன் கோவில் தெரு சாலை, ரூ. 5 லட்சம் மதிப்பில் பேருந்து நிறுத்தம் என மொத்தம் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பணிகள் தொடங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவா் ஏ. தேவா பங்கேற்று, சாலைப் பணிகளை தொடங்கி வைத்தாா். அத்துடன், சாலைப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களின் தரம் குறித்தும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
நிகழ்ச்சியில், திருவாரூா் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் ராதாகிருஷ்ணன், ஊராட்சித் தலைவா் காளிமுத்து, துணைத் தலைவா் காா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.