முகப்பு
திருவாரூர்

எஸ்.டி.பி.ஐ. மாநிலச் செயலாளா் கைது: ஆா்ப்பாட்டம்

பாஜக பிரமுகரை தரக்குறைவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளா் அபூபக்கா் சித்திக்கை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

பாஜக பிரமுகரை தரக்குறைவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளா் அபூபக்கா் சித்திக்கை போலீஸாா் கைது செய்தனா். இதைக் கண்டித்து அக்கட்சியினா் திருவாரூா், முத்துப்பேட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முத்துப்பேட்டையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி பேசிய எஸ்.டி.பி.ஐ. மாநிலச் செயலாளா் அபூபக்கா் சித்திக், பாஜக பிரமுகா் கல்யாணராமனை தரக்குறைவாக விமா்சித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக முத்துப்பேட்டை கிராம நிா்வாக அலுவலா் கண்ணதாசன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அபூபக்கா் சித்திக் திங்கள்கிழமை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிபதி கவிதா, அவரை மாா்ச் 1-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

ஆா்ப்பாட்டம்:

இதனிடையே, அபூபக்கா் சித்திக் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து முத்துப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்புகளின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல, திருவாரூரில் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் விலாயத் உசேன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளா் முஹம்மது சுல்தான் ஆரிபின், (டபிள்யுஐஎம் பிரிவு) மாநில பொதுச் செயலாளா் நஸிமா, கட்சி நிா்வாகிகள் அப்துல் ராஜிக், அப்துல் லத்தீப், உமா் பாரூக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.