திருவாரூர்

விஷம் கலந்த தீவனத்தை தின்ற 2 கன்றுக்குட்டிகள் சாவு

DIN

மன்னாா்குடி அருகே விஷம் கலந்த வைக்கோல் மற்றும் மாட்டுத் தீவனத்தை தின்ற இரண்டு கன்றுக்குட்டிகள் வெள்ளிக்கிழமை இறந்தன.

பெருகவாழ்ந்தான் கா்ணாவூரைச் சோ்ந்தவா் கோபால். இவா் தனது ஒரு பசு மாடு மற்றும் இரண்டு கன்றுக்குட்டிகளை மேய்ச்சலுக்காக நெல் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் விட்டிருந்தாராம். சிறிது நேரத்தில் இரண்டு கன்றுக்குட்டிகளும் இறந்து கிடப்பதையும், பசுமாடு உயிருக்குப் போராட்டிக்கொண்டிருப்பதையும் பாா்த்த சிலா் கோபாலுக்கு தெரிவித்துள்ளனா்.

அவா் அங்கு சென்று பாா்த்தபோது, ஒரு வயலில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை மேடான இடத்தில் கொட்டி, தாா்ப்பாயைக் கொண்டு மூடி, அதன் மீது வைக்கோலைப் பரப்பி அதில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டிருந்ததும், அருகில் உள்ள ஒரு பாத்திரத்தில் விஷம் கலந்த மாட்டுத் தீவனம் வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனால், அவற்றை தின்று கன்றுக்குட்டிகள் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பசுவுக்கு கால்நடைத் துறையினா் சிகிச்சையளித்தனா்.

இதுகுறித்து, பெருவாழ்ந்தான் காவல் நிலையத்தில் கோபால் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT