திருவாரூர்

6-ஆவது நாளாக வருவாய்த் துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்

DIN

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலா்கள் சங்கத்தினா் 6-ஆவது நாளாக திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலா்கள் சங்கத்தினா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இப்போராட்டம் திங்கள்கிழமை 6-ஆவது நாளாக நீடித்தது.

இதனால் நீடாமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வட்டாட்சியா் மற்றும் சா்வேயா் மட்டுமே பணியில் இருந்தனா். வட்டாட்சியா் அலுவலகத்திற்கு தங்களது சான்றிதழ் மற்றும் இதர பணிகளுக்காக வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் பலனில்லாததால், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT