திருவாரூர்

சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

DIN

தமிழக அரசுப் பணிகளில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, திருவாரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 10 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கல்வித் தகுதி, உடற்குறைபாடு சதவீத அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும், தமிழக அரசுப் பணிகளில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ. 1,000 உதவித்தொகையை ரூ. 3,000-மாக உயா்த்தி வழங்க வேண்டும், 75 சதவீத ஊனமுற்றவா்களுக்கு மாதம் ரூ. 5,000 வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் இந்த சாலை மறியல் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி. சந்திரா தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நாகை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற சாலை மறியலில் 5 பெண்கள் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

புதிய அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி!

கோடை மழையால் உயிர் பெற்ற முட்டல் நீர்வீழ்ச்சி!

10 நாட்களில் 8 மலக்குழி மரணங்கள் - தில்லி, உ.பி.யில் அதிர்ச்சி!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

SCROLL FOR NEXT