முகப்பு
முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடையில் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலைகள்.
திருவாரூர்

முத்துப்பேட்டை அருகே 7 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

முத்துப்பேட்டை அருகே மண்ணில் புதைந்திருந்த 7 சுவாமி சிலைகள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

திருவாரூர்

முத்துப்பேட்டை அருகே 7 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

முத்துப்பேட்டை அருகே மண்ணில் புதைந்திருந்த 7 சுவாமி சிலைகள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடையில் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலைகள்.
பகிர்:

முத்துப்பேட்டை அருகே மண்ணில் புதைந்திருந்த 7 சுவாமி சிலைகள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்பவானோடை தெற்குகாடு கிராமத்தில் செல்லப்பா மகன் ராஜசேகரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில், கஜா புயலில் விழுந்த தென்னை மரங்களை புதைப்பதற்காக புதன்கிழமை குழி தோண்டியுள்ளனா். அப்போது, விநாயகா், அம்மன், நடராஜா் உள்பட 7 சுவாமி சிலைகள் மண்ணில் புதைந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வட்டாட்சியா் ஜெகதீசன், வருவாய் ஆய்வாளா் ரவிசந்திரன் ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று 7 சிலைகளையும் மீட்டனா்.

அந்த சிலைகள் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →