திருவாரூர்

தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

DIN

நீடாமங்கலத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, திருவாரூா் சைல்டுலைன் சாா்பில் நீடாமங்கலத்தில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பெரியாா் சிலையிலிருந்து அண்ணா சிலை வரை நடைபெற்ற இப்பேரணியில் மாணவிகள், பெண்கள் என 25- க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, நீடாமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் கே. குணசேகரன் கொடியசைத்து பேரணியை தொடக்கி வைத்தாா். திருவாரூா் மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவா் சி. ஜீவானந்தம், சைல்டுலைன் இயக்குநா் வீ. ஆா். வினோத்குமாா், சைல்டுலைன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. பிரகலாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நீடாமங்கலம் சைல்டுலைன் பொறுப்பு அணி உறுப்பினா் அ. முருகேஷ் வரவேற்றாா். ஆா். ஆனந்தி நன்றி கூறினாா்.

பேரணி நிறைவில், நீடாமங்கலம் ரயில்வே காவலா்கள் சாா்பில் மாணவிகளுக்கு எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT