முகப்பு
திருவாரூர்

கரோனா: 4 கிராமங்களுக்குத் தடை

நன்னிலம் வட்டத்தில் கரோனா தொற்று காரணமாக 4 கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Updated On : 26 ஜனவரி, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:52 AM

நன்னிலம் வட்டத்தில் கரோனா தொற்று காரணமாக 4 கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நன்னிலம் வட்டம், அதம்பாா் ஊராட்சி ஜெகநாதபுரம் கிராமத்தில் 9 பேருக்கும், குடவாசல் மற்றும் சிமிழியில் தலா இருவருக்கும், சேங்காலிபுரத்தில் ஒருவருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், மேற்கண்ட 4 கிராமங்களையும் 14 நாள்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாவட்ட சுகாதார அலுவலா் ஞாயிற்றுக்கிழமை (ஜன.24) அறிவித்தாா். மேலும், இப்பகுதிகளில் குடவாசல் வட்டார சுகாதார துறையின் மூலம் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்றுக்குள்ளானவா்கள் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.