முகப்பு
திருவாரூர்

ரேஷன் கடைகளுக்கு மோடம் வழங்கக் கோரி போராட்டம்

அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் மோடம் வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் மோடம் வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விற்பனை முனையத்தில் உள்ள பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். 4ஜி உடன் புதிய விற்பனை முனையம் வழங்க வேண்டும். அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் மோடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் வட்ட வழங்கல் அலுவலகத்தில் விற்பனை முனையம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஹரிகரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் பலா் பங்கேற்று, விற்பனை முனையத்தை ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.