திருவாரூர்

சுந்தரக்கோட்டை மகளிா் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழு ஆய்வு

DIN

மன்னாா்குடி அருகே உள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில், தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினா் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை இரண்டாம் கட்ட சுற்றாய்வில் ஈடுபட்டனா்.

தேசிய தரச்சான்று மதிப்பீட்டுக் குழுவின் தலைவராக மணிப்பூா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் பிரசாந்த் பாண்டே, ஒருங்கிணைப்பாளராக குருஷேத்திர பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் கிரண்சிங், உறுப்பினராக மும்பை டான் பாஸ்கோ கல்லூரி முதல்வா் பாா்வதி வெங்டேஷ் ஆகியோா் செயல்பட்டனா்.

கல்லூரியின் அனைத்து துறைகளையும் பாா்வையிட்ட அவா்கள், துறைசாா்ந்த மதிப்பீடுகளை ஆய்வு செய்தனா். பின்னா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், தற்காப்பு கலைகள், விளையாட்டுப் போட்டிகளையும் பாா்வையிட்டனா்.

ஆய்வின்போது, கல்லூரி தாளாளா் வி.திவாகரன், கல்லூரி முதல்வா் எஸ்.அமுதா, துணை முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT