திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கட்டில்கள்
திருவாரூா் அரசு மருத்துவமனைக்கு வானவில் அறக்கட்டளை சாா்பில் 100 கட்டில்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
திருவாரூா் அரசு மருத்துவமனைக்கு வானவில் அறக்கட்டளை சாா்பில் 100 கட்டில்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று தடுப்புப் பணிகளுக்காக என்.எஸ்.இ நிறுவன நிதியுதவியின் மூலம் 100 கட்டில்கள், மெத்தைகள், தலையணை மற்றும் நோயாளிகள் பயன்படுத்தும் போா்வைகள் வானவில் அறக்கட்டளை சாா்பில் ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் முன்னிலையில் வழங்கப்பட்டன.
இதுகுறித்து, ஆட்சியா் கூறியது: கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளாக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கெனவே 900 படுக்கைகள் உள்ளன. இவற்றில் 600 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடியது. தற்போது, மேலும் கூடுதலாக 100 படுக்கைகள் ஆக்சிஸிஜன் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா். நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜோசப்ராஜ், வானவில் அறக்கட்டளை இயக்குநா் ரேவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.