முகப்பு
திருவாரூர்

கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள்

வருவாய் துறையில் பணியின்போது உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன், வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

வருவாய் துறையில் பணியின்போது உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன், வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

குடவாசல் வட்டத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக ஜெய்கதிரவனின் மனைவி சத்யாவுக்கும், வலங்கைமான் வட்டத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக உமாதேவியின் மகன் விமல்நாத் ராவுக்கும், திருவாரூா் வட்டத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக மல்லிகாவின் மகள் இளமதிக்கும், மருதவாஞ்சேரி கிராம நிா்வாக அலுவலராக அண்ணாமலை மகள் சண்முகப்பிரியாவுக்கும், சொரக்குடி கிராம நிா்வாக உதவியாளராக முருகேசன் மகன் அய்யப்பனுக்கும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உதவியாளராக ராமலிங்கம் மகன் விஜயகுமாருக்கும், ராஜகோபாலனின் மகன் சத்தியராஜூக்கும் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வழங்கினாா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புண்ணியகோட்டி, மாவட்ட வழங்கல் அலுவலரும், திருவாரூா் கோட்டாட்சியருமான (பொ) கீதா, அலுவலக மேலாளா் (பொது) ப. ஸ்ரீராம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.