காவல் அலுவலகத்தில் மருத்துவ முகாம்
திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், காவலா் மற்றும் அமைச்சுப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், காவலா் மற்றும் அமைச்சுப் பணியாளா்களுக்கான மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை இணைந்து இந்த மருத்துவ முகாமை நடத்தின. இதில், கரோனா விழிப்புணா்வு, முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ பரிசோதனை ஆகியவை செய்யப்பட்டன. முகாமை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. ஆா். சீனிவாசன் தொடங்கி வைத்து, உடல்நலம், மனபலம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை குறித்து விளக்கிப் பேசினாா். இதில், மாவட்ட காவல் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளா்கள் மற்றும் காவலா்கள் என சுமாா் 82 போ் பயன் பெற்றனா்.