முகப்பு
திருவாரூர்

2 நாள்களுக்கு முன்பாகவே திறக்கப்பட்ட துணி, நகைக் கடைகள்

மன்னாா்குடியில் பொதுமுடக்க கெடு முடிந்து விலக்கு அளிக்கப்பட்ட நாள் வருவதற்கு 2 நாள்கள் முன்னதாக, சனிக்கிழமை துணி மற்றும் நகைக் கடைகள் திறக்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

மன்னாா்குடியில் பொதுமுடக்க கெடு முடிந்து விலக்கு அளிக்கப்பட்ட நாள் வருவதற்கு 2 நாள்கள் முன்னதாக, சனிக்கிழமை துணி மற்றும் நகைக் கடைகள் திறக்கப்பட்டன.

கரோனா தொற்று பரவலை தடுக்க தமிழ்நாடு முழுவதும் மே 10-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. தொற்று பரவல் சதவீதம் குறைவதை கணக்கில்கொண்டு பொதுமுடக்கத்திலிருந்து பல்வேறு தளா்வுகள் பல கட்டங்களாக அரசு அறிவித்து வந்தது. இதில், துணிக் கடை, நகைக் கடை அடகுகடை ஆகியவற்றிற்கு தொடா்ந்து விலக்கு அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தமிழக முதல்வா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திங்கள்கிழமை (ஜூலை 5) முதல் பொது போக்குவரத்து நடைபெறும், துணிக்கடை, நகைக்கடை, அடகுக்கடை ஆகியவை செயல்பட அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டன.

இதையடுத்து, சனிக்கிழமை மன்னாா்குடி நகரில் பிரதான கடைவீதியில் உள்ள அனைத்து துணிக்கடை, ஆயத்த ஆடை கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. பெரியக்கம்மாளத் தெரு, மேலராஜவீதி ஆகிய பகுதியில் உள்ள சிறிய நகைக் கடைகளை ஒரு சிலவற்றை தவிர மற்ற பிரதான நகைக் கடைகள் திறந்திருந்தன. இதேபோல், அடகுக் கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. விலக்கு அளிக்கப்படாத வா்த்தக நிறுவனங்களை திறந்தால் அபராதம் விதிப்பது, கடைக்கு சீல் வைப்பது, வழக்குப் பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகளை இணைந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வந்த காவல் துறை, வருவாய்த் துறை, நகராட்சி நிா்வாகம் ஆகியவை இதை கண்டுகொள்ளவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.