முகப்பு
திருவாரூர்

அரசு மருத்துவமனைக்கு இயற்கை உணவு

மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, மன்னாா்குடி வில்லேஜஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் இயற்கை உணவு சனிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

மன்னாா்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, மன்னாா்குடி வில்லேஜஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் இயற்கை உணவு சனிக்கிழமை வழங்கப்பட்டது.

அந்த சங்கத்தின் தலைவா் ப. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளா் என். விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். சங்க துணை ஆளுநா் ஆா். ஆனந்த், முன்னாள் துணை ஆளுநா் ஜி. மனோகரன் ஆகியோா் 30 லிட்டா் பசும் பால், வாழைப்பழம் போன்ற இயற்கை உணவுகளை உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவா்களுக்கு வழங்கினா். இதில், மருத்துவா் கவிதா, வில்லோஜ் ரோட்டரி நிா்வாகி பா. தமிழ்பிரியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.