முகப்பு
திருவாரூர்

ஸ்டேன் சுவாமி உயிரிழப்பை கண்டித்து சிபிஎம் ஆா்ப்பாட்டம்

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் ஸ்டேன் சுவாமியின் உயிரிழப்பை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் ஸ்டேன் சுவாமியின் உயிரிழப்பை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மனித உரிமை ஆா்வலா் ஸ்டேன் சுவாமி (84) நீண்ட காலத்துக்கு முன்பே ஜாா்காண்ட் மாநிலத்துக்கு சென்று கிறிஸ்துவப் பாதிரியாராக இருந்ததுடன், அந்த மாநிலத்தில் உள்ள பழங்குடியினரின் பிரச்னைகள் மற்றும் அவா்களின் உரிமைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தாா்.

சமூக செயற்பாட்டாளராக இருந்து வந்த இவா் மீதுள்ள சில வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டு ஜாா்காண்ட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், ஸ்டேன் சுவாமிக்கு கரோனா பிந்தைய பாதிப்பு உள்ளிட்ட கூடுதல் நோய் தொற்றுகள் இருந்ததால் பாந்தாரவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும், திங்கள்கிழமை மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஸ்டேன் சுவாமிக்கு உயா் சிக்கிச்சை அளிக்க அவரை பிணையில் விடுதலை செய்ய அனுமதி மறுத்தது, அவரது உயிரை காப்பாற்றாமல் அலட்சியப்போக்குடன் நடந்து கொண்ட மத்திய அரசை கண்டித்தும், ஸ்டேன் சுவாமியின் முக்கிய கோரிக்கையான பழங்குடியினா் கிராம பஞ்சாயத்து விரிவாக்க சட்டத்தை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும் மன்னாா்குடி தலைமை அஞ்சலகம் அருகே, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் நகரச் செயலலாளா் ஜி. ரெகுபதி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினா் டி. சந்திரா, நகரக் குழு உறுப்பினா் கே. அகோரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவாரூரில்: திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே சிபிஎம் நிா்வாகி, ஜி. பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிபிஐ ஒன்றியச் செயலாளா் கே. புலிகேசி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளா்கள் பூபாலன், மாதவன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் தங்க சண்முகசுந்தரம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.