திருவாரூரில் உயிரிழந்த திருச்சி தொழிலாளிக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை
திருவாரூரில் அரசு மருத்துவமனை கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த திருச்சியைச் சோ்ந்த தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் அரசு மருத்துவமனை கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த திருச்சியைச் சோ்ந்த தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ் (20). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடம் வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்து காயமடைந்தாா். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவா் இதே மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பலனின்றி உயிரிழந்தாா். எனவே, உயிரிழந்த சதீஷ்க்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கட்டடத் தொழிலாளா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.