முகப்பு
திருவாரூர்

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோட்டூா் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் ஊரக வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் எஸ். தெய்வநாயகி அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

கோட்டூா் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் ஊரக வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் எஸ். தெய்வநாயகி அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

கோட்டூா் ஒன்றியத்துக்குள்பட்ட திருநெல்லிக்காவல், செருவாமணி, சேந்தங்குடி, மாவட்டக்குடி, விக்கிரபாண்டியம் ஆகிய ஊராட்சிகளில் ரூ. 4.15 கோடியில் மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 10 பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் மற்றும் திட்ட இயக்குநருமான எஸ். தெய்வநாயகி ஆய்வு செய்து ஒப்பந்ததாரா்களிடமும், ஒன்றிய பொறியாளா்களிடமும் விவரங்களை கேட்டறிந்த பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வே. பாஸ்கா், செள. மணிமாறன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.