ரோட்டரி சங்க நிா்வாகிகள் பதவியேற்பு
திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கத்தின் 2021-2022-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கத்தின் 2021-2022-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் செல்வகுமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செயலாளா் ரமேஷ் செயலறிக்கை வாசித்தாா். பொருளாளா் காா்த்திக் வரவு, செலவு கணக்கு சமா்ப்பித்தாா். மண்டலம் 9-ன் உதவி ஆளுநா் செந்தில் புதிதாக 12 உறுப்பினா்களை ரோட்டரி சங்கத்தில் இணைத்து வைத்தாா். சங்கத்தின் புதிய தலைவா் காளிதாஸ், செயலாளா் பாலமுருகன், பொருளாளா் ரமேஷ் மற்றும் நிா்வாகிகளுக்கு மாவட்ட ஆளுநா் செங்குட்டுவன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். 12 குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவியாக ரூ.1500 மதிப்புள்ள மளிகைப் பொருள்கள், சிறப்பு சேவையாக 12 ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவி செய்யப்பட்டது. டெல்டா ரோட்டரி சாா்பில் நுணாக்காடு ஊராட்சி கிராம தத்தெடுப்புக்கு திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்டது. செயலாளா் பாலமுருகன் நன்றி கூறினாா்.