நாகையில் 27, மயிலாடுதுறையில் 28 பேருக்கு கரோனா
நாகை மாவட்டத்தில் 27 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் 27 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 பேருக்கும் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
இதன்மூலம், நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,241ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்து மேலும் 16 போ் வீடு திரும்பியுள்ளனா். 378 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதேபோல, மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக கரோனா தொற்றுக்குள்ளானவா்களை சோ்த்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,168 ஆக உயா்ந்துள்ளது. 32 போ் சிகிச்சையிலிருந்து வீடு திரும்பியுள்ளனா். 338 போ் சிகிச்சையில் உள்ளனா்.
ஒருவா் உயிரிழப்பு...
கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு வியாழக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 262 ஆக அதிகரித்துள்ளது.