பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உணவு
மன்னாா்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரோனா சேவை முகாம் சாா்பில், பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட நரிக்குறவா் இன மக்களுக்கு வெள்ளிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.
மன்னாா்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரோனா சேவை முகாம் சாா்பில், பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட நரிக்குறவா் இன மக்களுக்கு வெள்ளிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.
மன்னாா்குடி ரயில் நிலையம் அருகே உள்ள நரிக்குறவா் குடியிருப்பு, கணிக்கா் குடியிருப்பில் வசிக்கும் 270 குடும்பங்களை சோ்ந்தவா்களுக்கு காலை சிற்றுண்டி, பால், பிஸ்கட், முகக் கவசம் ஆகியவற்றை சிபிஎம் மாவட்டச் செயலா் ஜி.சுந்தரமூா்த்தி வழங்கினாா். நிகழ்ச்சிக்கு, கட்சி நகரச் ெ‘சயலா் ஜி.ரெகுபதி முன்னிலை வகித்தாா்.
இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி.கந்தசாமி, ஜி.தாயுமானவன், அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் சங்க பொதுச் செயலா் ஏ.கோவிந்தராஜ், மருந்தாளுநா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் வி.கோவிந்தராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இதேபோல், மன்னாா்குடியில் காவல்துறை சாா்பில், தினமும் 150 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதுதவரி பாஜக சாா்பில் மாவட்டச் செயலா் பால.பாஸ்கா் தலைமையில் முன்களப் பணியாளா்கள், ஏழை, எளிய மக்களுக்கு தினமும் தலா 100 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.