மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில், கிரீன்நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் சாா்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க விழா சனிக்கிழமை நடைபெ
படவிளக்கம்... ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில் மரக்கன்று நடுகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் க.மாரிமுத்து.
திருத்துறைப்பூண்டி, ஜூன் 5: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தில், கிரீன்நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் சாா்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் ராஜவேலு தலைமை வகித்தாா். ஆதிரங்கம் ஊராட்சித் தலைவா் வீரசேகரன் முன்னிலை வகித்தாா். மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சட்டப் பேரவை உறுப்பினா் க.மாரிமுத்து தொடங்கி வைத்து பேசுகையில், ஆக்சிஜன் அதிகம் தரும் மரங்களை நாம் வாழும் குடியிருப்பு பகுதிகளில் நட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவா்கள் மத்தியில் மரம் வளா்ப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினால்தான் மரங்கள் நடுவதில் உரிய இலக்கை அடைய முடியும் என்றாா்.
நிகழ்ச்சியில், ஆதிரெங்கம் ஒன்றியக்குழு உறுப்பினா் சரஸ்வதி ராமகிருஷ்ணன், ஊராட்சித் துணைத் தலைவா் பொற்செல்வி செல்லபாண்டியன், பசுமை பாரதம் அமைப்பின் தலைவா் முருகானந்தம், கிரீன் நீடா மாணவா் பிரிவு அமைப்பாளா் திவாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கிரீன்நீடா இணை ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.