திருவாரூர்

கரோனா நிவாரண நிதி 2-ஆவது தவணை: டோக்கன் வழங்கும் பணி

DIN

திருவாரூரில் கரோனா நிவாரண நிதி 2-ஆவது தவணை பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கரோனா பொதுமுடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதி ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் மே மாதத்தில் வழங்கப்பட்டது. தற்போது 2-ஆவது தவணை ரூ. 2 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகை பொருள்களை பெற்றுக்கொள்வதற்கான டோக்கன்கள் வெள்ளிக்கிழமை முதல் ஜூன் -14 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.

அதன்படி, நியாயவிலைக்கடை ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று, நாள் ஒன்றுக்கு 75 முதல் 200 பேருக்கு டோக்கன்கள் வழங்கி வருகின்றனா். இந்தப் பொருள்கள் ஜூன்-15 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. டோக்கனில் குறிப்பிட்ட தேதி, நேரத்தில் கடைக்குச் சென்று பொதுமக்கள் பொருள்களை பெற்றுக் கொள்ளலாம்.

அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 728 நியாயவிலைக் கடைகளில் 3,76,943 குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. திருவாரூா் நகரில் காகிதக்காரத் தெரு, தென்றல் நகா், ராமநாதன் தெரு, முதலியாா் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, நல்லப்பா தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நியாயவிலைக்கடை ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT