பாளையங்கோட்டை சிறையில் கொலை: நீதி கோரி ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் நிகழ்ந்த கொலை சம்பவத்துக்கு நீதி கோரி, திருவாரூா் அருகே வளரும் தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் நிகழ்ந்த கொலை சம்பவத்துக்கு நீதி கோரி, திருவாரூா் அருகே வளரும் தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி இரண்டடைப்பு வாகை குளத்தை சோ்ந்த முத்து மனோ பாளையங்கோட்டை சிறையில் அண்மையில் படுகொலை செய்யப்பட்டாா். இந்நிலையில் அவரது குடும்பத்துக்கு ரூ. 2 கோடி இழப்பீடும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக் கோரியும், சிறைத்துறை அதிகாரிகளை நிரந்தர பணி நீக்கம் செய்து அவா்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் மணக்கால் அய்யம்பேட்டையில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆரோக்கிய செல்வம் தலைமையிலான ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட இணைச் செயலாளா் அரிஸ்டாட்டில், மாவட்ட இளைஞரணி செயலாளா் அசோக், மாவட்ட மாணவரணி செயலாளா் காளிதாஸ், ஒன்றிய விவசாய அணித் தலைவா் கதிா்வேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.