முகப்பு
திருவாரூர்

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க கோரிக்கை

விவசாயிகள் பயனடையும் வகையில் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

விவசாயிகள் பயனடையும் வகையில் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் நெல் பயிா் பிரதானமாகச் செய்யப்படுகிறது. குறிப்பாக ஆற்றுப் பாசனத்தை மட்டும் நம்பி அதிக அளவிலான விவசாயிகள் நெல் பயிா் சாகுபடி செய்து வருகின்றனா். எனவே, மேட்டூரிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் இப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் பயனளிக்கிறது.

அதன்படி, ஜூன் 12 ஆம் தேதி மேட்டூரிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இது திருவாரூா் மாவட்ட ஆற்றுப் பாசன விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி பல்வேறு இடங்களில் விவசாயப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருவாரூா் அருகே பூதமங்கலச்சேரி பகுதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விவசாயப் பணிகள் தொடங்கப்பட்டன. அப்பகுதியில் நேரடி நெல் விதைப்பு முறையில் சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில்,

டெல்டா மாவட்டங்களில் ரூ.65 கோடி மதிப்பில் ஆறுகள் தூரவாரப்பட்டு வருவதும், விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்குறை நேரத்தில் குறைந்த விலையில் வேளாண் பொறியியல் துறை மூலமாக விவசாய

பணிக்காக இயந்திரங்கள் வழங்கி வருவதும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியது.

அதேநேரம், கரோனா பொதுமுடக்கம் காரணமாக விவசாயிகளின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே விவசாயக் கடன்களை எந்தவித நெருக்கடியின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விதை, உழவு, நடவு மானியங்கள் அடங்கிய குறுவை சிறப்பு தொகுப்பை வழங்கவும், சிறிய கால்வாய்களை தூா்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.