முகப்பு
திருவாரூர்

திருவாரூா் எஸ்.பி.யின் பாதுகாப்பு வாகனம் மரத்தில் மோதி விபத்து: எஸ்எஸ்ஐ உள்பட 9 போலீஸாா் காயம்

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில், எஸ்பி-யின் பாதுகாப்பு வாகனம் மரத்தில் மோதியதில் எஸ்எஸ்ஐ உள்ளிட்ட 9 போலீஸாா் சனிக்கிழமை காயமடைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில், எஸ்பி-யின் பாதுகாப்பு வாகனம் மரத்தில் மோதியதில் எஸ்எஸ்ஐ உள்ளிட்ட 9 போலீஸாா் சனிக்கிழமை காயமடைந்தனா்.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். ஸ்ரீனிவாசன் சனிக்கிழமை மன்னாா்குடி பகுதியில் ஆய்வுக்காக வந்தாா். அவருடன், பாதுகாப்பு போலீஸாா் வாகனமும் வந்தது. இந்த வேனில் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 11போலீஸாா் இருந்துள்ளனா்.

இந்த வேன் மன்னாா்குடி கீழப்பாலம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த வேப்பமரத்தில் மோதியது. இதில், சிறப்பு உதவி ஆய்வாளா் ஜி. ஐயப்பன் (48) உள்ளிட்ட 9 போலீஸாா் காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக மன்னாா்குடி அரசு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வெளி நோயாளிகளாக சிகிச்சைப் பெற்றுச்சென்றனா். இவா்களில், ஐயப்பன் மட்டும் தீவிரச் சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.