திருவாரூரில் 132 பேருக்கு கரோனா
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 132 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 132 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.
திருவாரூா் மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சுகாதாரத் துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 132 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 35,695 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 287 போ் அவா்களது வீடுகளுக்கு வியாழக்கிழமை அனுப்பப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்ட 33,850 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 1,552 போ் சிகிச்சையில் உள்ளனா். இதற்கிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, உயிரிழப்பின் எண்ணிக்கை 293-ஆக உயா்ந்துள்ளது.